மதத்தளங்கள் மீது தாக்குதலை செய்வதன் மூலம் இனக்கலவரமொன்றை ஏற்படுத்தி
நாட்டின் சமாதானத்திற்கு குந்தகம் விளைப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின்
முன் நிறுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத்துறை
அமைச்சருமான றிசாத் பதியுதீன் நாட்டில் சிறுபான்மை சமூகத்தின் உரிமையினை அனுபவிக்க
விடாமல் தடுக்கும் செயலெனவும் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
காலியில் சில தினங்களுக்கு
முன்னர் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பில் பொலீஸார் சட்ட நடவடிக்கையினை
முன்னடுததுள்ள நிலையில் இந்த தாக்குதல் தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ள நபர்கள் தொடர்பில்
கடும் நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சவூதி அரேயியாவுக்கு
சென்றுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த சம்பவம் தொடர்பில் கேள்வியுற்றதும்,உரிய
பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த சம்பவம் குறிதது பாராபட்சமற்ற
விசாரணையினை செய்வதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
மதத் தங்கள் என்பன
மனிதர்களை துாய்மைப்படுத்தி இறைவனுடன் நெருக்கங்களை ஏற்படுத்தும் புனிதத் தளமாகும்.அது
எந்த மாதங்களாக இருந்தாலும் அந்த மதங்களுடைய கௌரவம் மதிக்கப்பட்டு,கண்ணியமளிக்கப்பட
வேண்டும்.இவ்வாறான பணிகளை செய்யும், தளங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் என்பது மனித
வாழ்க்கையின் கட்டமைப்பினை சரிந்து விழச் செய்யும் ஒன்றிற்கான அடித்தளமாகும்.இதன் மூலம்
அழிவுகளும்,இழப்புக்களுமே ஏற்படும் என்று சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன்,தாக்கப்பட்டு
சேதத்துக்குள்ளான் தேவாலயங்களை அரசாங்கம் புனரமைப்பு செய்து கொடுப்பதன் அவசியம் தொடர்பிலும்
குறிப்பிட்டுள்ளார்.
ஹிக்கடுவை தேவாலயம் தாக்குதல் தொடர்பில் பிரதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள
அச்ச சூழ் நிலை தொடர்பிலும்,அப்பிரதேச மக்களின் பாதுகாப்பு தொடர்பிலும் அதிகாரிகள் கூடிய கரிசனை
காட்ட வேண்டும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான
றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment