வடக்கில் 23 வருடங்களின் பின்னர்
மீண்டும்கிளிநொச்சிக்கான புகையிரத
சேவை இன்று
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்ககப்பட்டது.இன்று காலை மாங்குளத்திலிருந்து வைபவ
ரீதியாக புகையிரதம் பயணிக்கும் நிகழவில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாங்குளத்திலிருந்து
-கிளிநொச்சிக்கான முதலாவது பதிவினை
பதிவேட்டில் பொறித்தார்.
இங்கு
கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் -
அழிந்து போன
புகையிரத சேவை மீண்டும் இன்று இங்கு ஆரம்பித்து வைப்பதில் மட்டில்லா
மகிழ்ச்சியடைகின்றேன்.இந்த புகையிரத சேவையானது பிரதேச மக்களின் வாழ்வாதார மற்றும்
பயணத்தின் இலகுத தன்மைக்கு பெரும் உதவியாகும் என்றும் கூறினார்.
இதன் போது ஐக்கிய மக்கள் சுதந்திர
முன்னணயின் முல்லைத்தீவு மாவட்ட வேட்பாளரும்,ஜனாதிபதியின்
முன்னால் முல்லை இணைப்பாளருமான சதாசிவம் கணகரத்தினம் உட்பட பலரும் கலந்து
கொண்டனர்.
No comments:
Post a Comment