( மன்னார் அம்பி )
இலங்கையில்
இனவாத சிந்தனைகளும்,தற்கு துணைபோகும் குழுக்களும்,எல்லா மதங்களிலும் இருக்கின்றதை வெளிப்படையாக
ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.இஸ்லாமியர்களை பொறுத்த வரையில் அண்மைக்காலமாக சிங்கள பௌத்த
மத வாத அமைப்புக்களால் கடுமையாக காயப்படுத்தப்பட்டுவருகின்ற செய்திகளை எத்திசையில்
நோக்கினும் அதனை அடையாளமாக கண்டுகொள்ள முடிகின்றது.இது ஒரு புரம் இருக்க முஸ்லிம்களை
காட்டி அரசியல் அடைக்கலம் தேடும் சக்திகளின் கைவரிசையும் அவ்வப் போது இடம் பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
கடந்த
காலங்களில் வடக்கில் குறிப்பாக மன்னார் கரையோரப் பிரதேசத்தினை அமைச்சர் றிசாத் பதியுதீன் முஸ்லிம் வலயமாக பிரகடனம்
செய்துள்ளார் என்று சிங்கள அமைப்புக்களும்,அதற்கு சாமரம் வீசும் சில ஊடகங்களும் செய்திகளை
வெளியிட்ட வண்ணம் உள்ளன.அதற்கு காரணமாக வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள்
தமது தாயக மண்ணில் மீள்குடியேற வந்துள்ளதை எடுத்த ஆதரமாக கொண்டு வெளியிட்டுள்ளமையினையும்
அறியமுடிகின்றது.
1990
ஆம் ஆண்டின் வரலாற்று பதிவினை தெரியாக குழுவொன்று உண்மைக்கு மாற்றமான கருத்துக்களை
விதைத்துவருகின்றது என்று கூறினால் அது பிழையில்லை என்பதை வடக்கிலிருந்து புலிகளினால்
துரத்தப்பட்ட வரலாற்றை தெரிந்தவர்கள் நன்கு அதனை அறிந்து கொள்வார்கள்.அவர்களது வெளியேற்றத்தினால்
இழக்கப்பட்டவை ஏராளம்,அதனை இங்கு காட்டுவது எனது கட்டுரையின் நோக்கமல்ல,மாறாக இந்த
நிகழ்வகள் இடம் பெற்று இற்றைக்கு 23 வருடங்கள் கழிந்த நிலையிலும்,அன்று முஸ்லிம்களுக்கு
எதிராக ஆயுதத்தை திருப்பிய குழுவினருடன் இருந்து செயற்பட்ட அமைப்பினரும்,இன்றைய அரசியல்
தலைமைகளும் இதற்கு பதிலிருத்தே ஆக வேண்டும்.
இந்த
நிலையில் இந்த நாட்டில் சகல சமூகங்களுடனும் நெருக்கமாக இன உறவுடன் வாழந்து வரும் முஸ்லிம்களின்
மத,கலாச்சார,மற்றும் பண்பாடுகளுக்கு சேதம்
விளைவிக்கும் செயற்பாடுகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.ஹலால் என்ற பிரச்சினையில்
ஆரம்பமானது இன்று தமிழ் பாடசாலைகளில் மஸ்லிம் பெண்கள் ஹபாயா அணியக் கூடாது என்று தமிழ்
பாடசாலை அதிபர்கள் சிலர் முஸ்லிம் மாணவிகளுக்கு விடுத்துவரும் அச்சுறுத்தல்கள் குறித்தும்
நாம் புறந்தள்ளி சிந்திக்க முடியாது என்ற யதார்த்தத்தை பரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம்
பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்ற போது,அறிக்கைவிடும் எதிர் தலைமைகள்,கோயில்கள் தாக்குதலுக்குள்ளாகும்
போது அதனை பெரும் அசம்பாவிதமாக காட்டி அதில் இடம் பெறும் பிரதேசத்தின் முஸ்லிம் அரசியல்
தலைமகளை அதனோடு இணைத்கு பேசுவது தான் அவர்களுக்கு நாகரீகமாகும்..
இந்த
வகையில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்கள் தொடர்பில் தமிழ் தலைமைகள்
அறிக்கைவிடுவது பாராட்டுக்குரியது தான்,அறிக்கை விடும் அந்த தலைமைகள் வடக்கில் முஸ்லிம்கள்
தமது பூர்வீக மண்ணில் மீள்குடியேறவருகின்ற போது,அதற்கு எதிராக பிழையான அறிக்கைகளை எவ்வித
மனசாட்சியுமின்றி அரை வேக்காட்டுத்தனமாக விட்டுவருவது கண்டிக்கக் கூடியதும்,கலைப்பட
வேண்டியதுமாகும்.தமது சகோதர சமூகத்திற்கு தம்மால் இழைக்கப்பட்ட அநியாயத்தை எண்ணி வெதனைப்
படுவதைவிடுத்து வெந்த புண்ணில் வேலியினை பாய்ச்சும் வேலையினை செய்து கொண்டு,முஸ்லிம்களுக்கு
எதிராக பொதுபல சேனா போன்ற அமைப்புக்கள் செய்யும் அநியாயங்களுக்காக முஸ்லிம்களுக்கு
ஆதரவாக அறிக்கைவிடுகின்ற போது,அந்த அறிக்கையானது பொதுபலசேனா போன்ற கடும் போக்குவாதிகளின்
இலக்கு முஸ்லிம்களே என்பதையும்இவ்வாறான இரட்டைத் தலை கொல்லி எறும்புகளுக்கு புரிய வைக்க
வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது்.
வடக்கில்
முஸ்லிம்கள் காணிகளை கபளீகரம் செய்கின்றனர்.இரவோடு இரவாக காணிப்பிடிக்கின்றனர்.வெளி
மாவட்ட முஸ்லிம்களை அமைச்சர் றிசாத் பலாத்கார குடியேற்றம் செய்கின்றார்.தொழில் வாய்பில்
தமிழர்களுக்கு முஸ்லிம்கள் அநியாயம் இழைக்கின்றனர் என்றெல்லாம் பச்சையாக நாக் கூசாமல்,அபாண்டங்களை
முஸ்லிம்கள் மீது சுமத்திவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பும்,அதனது நிழலில் வாழும் சில
மதவாதிகளும்,இன்று இலங்கை முஸ்லிம் பெண்களுக்காக குரல் கொடுப்பதாக கூறுவது சிறுபிள்ளை
தனமானது என்பதையும் புரிந்து கொள்ளமுடிகின்றது.முஸ்லிம் பெண்கள் அநியும் இஸ்லாமிய ஆடையான
ஹிஜாப் தொடர்பில் பல சேனா வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்
பாரர்ளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் விட்டுள்ள எதிர் அறிக்கை வேடிக்கையானதாகும்.
இதனை
முஸ்லிமகள் நன்கு புரிந்து கொள்வார்கள் என்பதை நாம் கூறி தெரிய வேண்டியதில்லை.ஒரு சமூகத்தின்
உரிமைகளை குளி தோண்டி புதைத்துவிட்டு,அவர்களி்ன் வித்துடல்கள்(ஜனாஸாக்கல்) மீது அமர்ந்து
கொண்டு ஆட்சி செய்யும் ஜடவாதிகளின் வெறும் வாய் வார்த்தைகளால் ஒரு போதும் வடமாகாண முஸ்லிம்களை
தமது பக்கம் இழுத்து எடுத்துவிடலாம் என்னும்
மனப்பால் குடிக்கும் நிலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் சென்றுள்ளதை
பார்க்க முடிகின்றது.
வன்னியில்
உள்ள தமிழ் கூட்டமைப்பு எம்பிக்கள் கக்கிவரும் கடும் இனவாதத்துக்கும்,பொதுபலசேனா வெளியிட்டு
வரும் கருத்துக்களுக்கும் இடையில் நீண்ட தொரு இடை வெளி்யுள்ளது.இன்று விடுதலைப் புலிகளின்
கூண்டில் இருந்து வளர்ந்து வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிந்தனை மற்றும் செயற்பாடுகள்
ஒரு போதும் மாற்றம் பெறாது.அனால் பலா சேனாவின் புரியாத சிலதும்,சில உயர் அழுதமுமே அதனை
ஆள வைக்க பாரக்கின்றது.
எது
எவ்வாறாக இருந்தாலும் முஸ்லிம்களின் அபாயா தொடர்பில் செல்வம் அடைக்கல நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடமாகாண
முஸ்லிம்களுக்கு செய்துள்ள துரோகங்களும,அநியாயங்கம் என்றும் மறைவதில்லை என்பதை கூறி
வைக்கவிரும்புகின்றேன்.
No comments:
Post a Comment