
தனித்தமிழீழம் என்ற முனைப்புடன் செயற்பட்ட விடுதலைப் புலிகள் போன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தற்போது செயற்பட்டு வருகின்றது. நாட்டில் எந்த தருணத்திலும் பிரிவினைக்கு இடம் கிடையாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் எல்லா கட்சிகளும் பேசி தெரிவுக்குழுக்களினூடு முடிவு காணப்படும். அதைவிடுத்து தனித்தமிழீழம் போன்றதொரு தீர்வை வழங்கிவிட முடியாது. இதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்து கொள்ள வேண்டும்.
விடுதலைப் புலிகள் ஆயுதவழியில் அடைய நினைத்த இலக்கை, ஜனநாயக ரீதியில் அடைந்துவிடலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணும் கனவு பலிக்காது என்று அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள அரசாங்க ஊடக மத்திய நிலையத்தில் சற்றுமுன்னர் (யூன் 20, 2.30 மணி) ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு அரசாங்கத்தின் முடிவுகளை அறிவித்து பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment