சைனிஸ் உணவு இந்த சிறுவனை எப்படி மாற்றியிருக்கிறது பார்த்தீங்களா?...
அமெரிக்காவை சேர்ந்த 6 வயது சிறுவனுக்கு சீன உணவு வகைகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. உடனே அவன் தனது வீட்டில் நிறுத்தியிருந்த காரை தானாகவே ஓட்டிச் சென்றான்.
சைனீஷ் உணவகத்தைத் தேடி சுமார் 5 கி.மீற்றர் தூரம் காரை ஓட்டிச் சென்றான். அவன் தாறுமாறாக கார் ஓட்டுவதை பார்த்து மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே பொலிசார் அங்கு விரைந்து வந்து கார் ஓட்டிய சிறுவனை தடுத்து நிறுத்தினர்.
அவனிடம் விசாரணை நடத்திய போது, தனக்கு கார் ஓட்ட தெரியாது என்றான். கார் ஓட்ட இதுவரை எனக்கு யாரும் கற்றுத் தரவில்லை, எனது தந்தையை பார்த்து கார் ஓட்ட கற்றுக் கொண்டேன் என்றும் தெரிவித்துள்ளான்.

No comments:
Post a Comment