Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Tuesday, April 16, 2013


பாஸ்டன் குண்டுவெடிப்புடன் தொடர்பில்லை : பாக்.தலிபான் மறுப்பு

பாஸ்டன் குண்டுவெடிப்புக்கும் தமக்கும் தொடர்பில்லை என பாகிஸ்தானின் தலிபான் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
2010ம் ஆண்டு அமெரிக்காவின் டைம்ஸ்கொயர் சதுக்கத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்கு பின்புலத்தில் செயற்பட்டதாக கருதப்படும் தலிபான் அமைப்பான தெஹ்ரீக் ஈ தலிபான் (TTP) குழுவினர் நேற்றைய குண்டுவெடிப்பு தொடர்பில் தகவல் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.


அதில், 'அமெரிக்காவையும் அதன் கூட்டு நாடுகளையும் நாமும் தாக்கவிருந்தோம். ஆனால், நேற்றைய தாக்குதலில் நாம் ஈடுபட்டிருக்கவில்லை. எமக்கும் இக்குண்டுவெடிப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால் அமெரிக்காவை தாக்க தேவையான அனைத்து வழிகளிலும் நாம் தொடர்ந்து முயற்சிப்போம்' என தெரிவித்துள்ளனர். தெக்ஹ்ரீக் ஈ தலிபான் அமைப்பின் பேச்சாளர் ஈஷானுல்லா ஈஷன் இத்தகவலை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னணி விளையாட்டு நிகழ்வான பாஸ்டன் மரதன் போட்டிகளில் நேற்று மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டும் 150க்கு மேற்பட்டோர் காயமடைந்தும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகெங்கும் இருந்து மக்களை ஒன்றிணைத்து, உணர்புபூர்வமாக மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் இவ்வாறான விளையாட்டு பொதுவிடத்தில் குண்டுவெடிப்பு நடைபெறுவது அர்த்தமற்ற வன்முறையை குறிக்கிறது என ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.

No comments:

Post a Comment