இலங்கையின் 65
வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு புத்தளம் நகரம் எங்கும் தேசிய கொடிகள் பறக்க
விடப்பட்டிருந்தன.புத்தளம் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பாடசாலைகள்,வாகனங்கள்
என்பனவற்றிலும்,புத்தளத்தில் உள்ள இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லுாரியிலும் இந்த
கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.
அதே வேளை இலங்கை
ஜமாதே இஸ்லாமியின் புத்தளம் கிளையும்,குவைத் வைத்தியசாலையும் இணைந்து புத்தளம் வெளிவட்ட
வீதியில் அமைந்துள்ள ஸ்ரீவிசுத்தாராம பௌத்த விகாரையில் ஏற்பாடு இலவச மருத்துவ நடமாடும் சேவையொன்றை ஏற்பாடு செய்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment