Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Sunday, February 3, 2013

தாலிபான்,அல்கைதா தடைக்கு நான் உடன்படோம்-முஸ்லிம் கவுன்சில் அறிவிப்பு

'தலிபான் மற்றும் அல்கைதா அமைப்புக்களை தடை செய்வது குறித்து இலங்கை அரசாங்கம் என எடுத்துள்ள தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறான தடைச் சட்டங்கள், சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மீது துஷ்பிரயோகத்தை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தும்' என்று இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் வலியுறுத்தியுள்ளது.


முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக் காலமாக பௌத்த தீவிரப் போக்குடைய அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் பிரசாரங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டது.

இதன்போது உரையாற்றிய இலங்கை முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் கூறுகையில், 'முஸ்லிம் சமூகத்தின் கலாச்சார அம்சங்கள் குறித்து தவறான கருத்துக்களை வெளியிடுவதை அனைவரும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறாக தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதன் மூலம், முஸ்லிம்களுக்கும், ஏனைய சமூகங்களுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்படும் அபாயம் இருக்கின்றது.

குறிப்பாக, ஹலால் சான்றிதழ்கள் வழக்கும் நடைமுறைகள் குறித்து சில அமைப்புக்களால் அண்மைக்காலமாக சில தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன' என்றார்.

அந்த சந்திப்பின்போது பேசிய ஜனாதிபதி சட்டத்தரணியான எம்.எம்.சுஹைர் உரையாற்றுகையில், 'தலிபான்கள் மற்றும் அல்கைதாவுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் உத்தேச தடையை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறான தடைச் சட்டங்கள், சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மீது துஷ்பிரயோகத்தை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தும்.

சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளுடன், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுடன் வணிகத் தொடர்புகளை வைத்திருக்கின்றனர். இந்தச் சட்டங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படும் பட்சத்தில், அது இவர்களுக்கு பாதகமாக அமையலாம். இவை குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடவுள்ளோம்' என்றார்.

No comments:

Post a Comment