சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் முதல் இடம்பெற்ற மாணவன் நாடு திரும்பினார்
சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரில் நடைபெற்ற சர்வதேச
அல்குர்ஆன் மனனப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற இலங்கை மாணவனான ரிப்தி
முஹம்மத் ரிஸ்கான் இன்று காலை 7.24 மணியளவில் இலங்கை கட்டுநாயக்க
விமானநிலையத்தை வந்தடைந்தார். சர்வதேச ரீதியில் நடைபெற்ற இந்தப்
போட்டியில் பங்குபற்றி முதலாம் இடத்தைப் பெற்று இலங்கைக்கு பெருமை
சேர்த்து, நாடு திரும்பிய மாணவன் ரிஸ்கானுக்கு விமான நிலையத்தில் புத்த
சாசன மற்றும் சமயவிவகார பதில் அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்த்தன
தலைமையிலான குழுவினரால் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.
83 நாடுகள்
பங்கு பற்றிய இந்த சர்வதேச போட்டியில் கொழும்பு பெரிய பள்ளிவாசலில்
அமைந்துள்ள மதீனத்துல் இல்ம் அரபுக் கல்லூரியின் 14 வயதுடைய மாணவரே
முதலாமிடத்தை பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment