Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Tuesday, September 11, 2012

கொழும்பில் வாகனத்திலிருந்து சடலம்மீட்பு


கொழும்பு, ஹவலொக் டவுனில் நிறுத்தி வைக்கப்பட்ட காரொன்றிலிருந்து சடலமொன்றை கண்டெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவிக்கையில்...

இன்று மாலை 5 மணியளவில் எமக்கும் கிடைத்த தகவலொன்றின்படி கொழும்பு, ஹவலொக் டவுனில் அமைந்துள்ள தனியார் சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிவப்பு நிற காரொன்றிலிருந்து ஆணொருவரின் சடலத்தை கண்டெடுத்தோம்.

சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர் ஹொரணை, மீட்டியாகொட பகுதியைச் சேர்ந்த 60 வயதான நிமால் காமினி ஜயசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். மரண விசாரணைகளை புதுக்கடை நீதவான் மேற்கொண்டதையடுத்து பிரேத பரிசோதனைக்காக சடலம் தற்சமயம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment