அவுஸ்திரேலியாவுக்கு
கடல் மார்க்கமாக செல்ல அழைத்துவரப்பட்டிருந்த நிலையில் புத்தளம் பொலீஸாரால் கைது செய்யப்பட்ட
11 பேரையும் இம்மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட
நீதவான் ஹேசான்த டி மெல் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
சட்ட
விரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கென அழைத்து வரப்பட்டு புத்தளம் பகுதி வீடொன்றில்
தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த 11 பேரினையும்.12 அம் திகதி புத்தளம் பொலீஸார்
கைது செய்து,புதன்கிழமை புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
அவ்வாறு
கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர் மட்டக்களப்பையும்.2 பேர் முல்லைத்தீவினையும்.சேர்ந்தவர்களென
பொலிஸார் தெரிவித்தனர்.அதே வேளை 11 பேரில் மூவரிடம் தலா இரண்டறை இலட்சம் ரூபா வீதம்
பணம் அறவிடப்பட்டதாகவும்,இவர்களை அழைத்து வந்த சந்தேக நபர தலைமைறைவாகியுள்ளதாகவும்
பொலீஸார் தெரிவித்தனர்
No comments:
Post a Comment